digitalseo 4

குற்றாலம் with Digital SEO – 4

July 20, காலை 6.30 மணி

“ஞாயிறு” வந்தது வானிலும் நாளிலும், ஆம் பொழுது புலர்ந்தது…கட்டிலில் படுத்திருந்த நாம் கண் விழித்து வெளியே வருகிறோம்…

குளிருக்கு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டும் தூங்கிய நம்மைப் போலவே கதிரவனும் மேகம் எனும் போர்வையைப் போர்த்திக் கொண்டு சோம்பலுடன் அரை உறக்கத்தில் இருக்க….இப்போதும் லேசாக விழுகிறது சாரல்…

Resort இல் சிலர் எழவில்லை, சிலரோ தூங்கவே இல்லை, இரவு முழுக்க பாடியும் பேசியும் விழித்தே இருந்திருக்கின்றனர்….நாம் அப்படியே நடந்து நேற்று குளித்த ஓடை அருவி அருகே செல்கிறோம்…நேற்று கூட்டம் இல்லா அந்த அருவி இன்று பிரபலம் அடைந்து கூட்டத்துடன் காணப்படுகிறது..

குற்றாலச் சாரல் நம்மை குளிர்விக்க , கிளி கீச்சிடும் குரலும், குயில் கூவும் ஓசையும் செவியில் கேட்கின்றன, பார்க்கும் திசையெல்லாம் பசுமை வண்ணமும் ஓடையின் நீரோட்டமும் கண்ணில் பட,

“ஓடை நீரோடஇந்த ஒலகம் அது போலஓடும் அது ஓடும்
இந்த காலம் அது போல
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே…..
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல….”

என்று நேற்று இரவு சிலர் பாடிய இளைய ராஜாவின் பாடலுக்கு இயற்கை காட்சி அமைத்தது போல் இருக்க… தென்றல் வந்து தீண்டுகிறது நம்மை…

காலை வேளையில் காலாற இந்த இயற்கை சூழலில் நடப்பதே தனி சுகம் ….மீண்டும் Resort வந்து சில நேரம் மொட்டை மாடியில் அமர்ந்திருக்கிறோம்..திருநெல்வேலியில் இருந்து தொலைவில் தெரியும் மேற்கு தொடர்ச்சி மலை இப்போது மிகவும் அருகில் தெரிய, குற்றால குறவஞ்சியின் குறத்தி நம் சிந்தையில் வந்து மலை வளம் கூறுகிறாள்….

“சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை அம்மே
வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே..”

என்று அனைத்து மலைகளும் இந்த திரிகூட மலையில் அடக்கம் என்கிறாள்…

குரங்கு கூட்டங்கள் குட்டிகளுடன் ஆங்காங்கே ஆடியும் ஓடியும் தாவியும் திரிகின்றன….ஒரு குரங்கு கீழே நிற்கும் two wheeler முன் இருக்கும் cover இன் zip ஐ திறந்து உள்ளே தின்ன எதுவும் இருக்கிறதா ? என்று பார்க்கிறது…மற்றொரு குரங்கு கையில் சிப்ஸ் பாக்கெட் வைத்து ருசித்து கொண்டிருப்பதை நாம் ரசிக்க….

அனைவருக்கும் காபி வழங்குகிறார்கள்…குளிருக்கு இதமாக காபி அருந்தி விட்டு…மீண்டும் அந்த ஓடை அருவிக்கு சென்று ஒரு முறை குளித்து விட்டு பசியோடு Resortக்கு நாம் திரும்ப….

தென்காசியில் இருந்து வாங்கி வந்திருக்கின்ற காலை உணவு தயாராக இருக்கிறது….வாழை இலை விரித்து கேசரி, வடை, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், வெண் பொங்கல், பூரி, கிழங்கு, இட்லி என வகை வகையாய் சுவையாக ஒருவர் மாற்றி ஒருவர் பரிமாறிக் கொண்டு உண்டு நாம் எழுந்து வெளியே வர,

அடுத்து வரும் session முழுக்க ஏதோ Cinema Shooting போல Reels shooting ஆகவும் Outdoor photography session ஆகவும் அமைகிறது….

reels
Instagram இல் இருந்து பல Inspiration reels எடுத்து அது போல பண்ணலாம் என்று சிலர் கூற, அனைவரும் நின்றும் ஓடியும் நடித்தும், சிலர் Dialogue பேசியும், முக பாவனை செய்தும், குதித்தும் ஆடியும், சிரித்தும் பாடியும் என பலப்பல பாவனைகளில் Reels தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்க…

ஒரு புறம் சிலர் வெவ்வேறு pose களில் நின்று Photo எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்…சாதரணமாக தினமும் instagaram இல் சில நொடிகள் வரும் பற்பல reels பார்க்கும் நாம் அவை எல்லாம் மிக easy ஆக செய்து விடலாம் என்று நாம் நினைத்திருக்க….


Camera on செய்தவுடன் Face expression மற்றும் lip movements கொண்டு வருவது எவ்வளவு கடினம் , எத்தனை take எடுக்க வேண்டி இருக்கிறது, light பார்க்க வேண்டும், பின்னால் இருக்கும் Background பார்க்க வேண்டும் …சில நொடி reels க்கு எவ்வளவு நேரம் மெனக்கெடல் செய்ய வேண்டி இருக்கிறது என்பதும் Video editing team படும் கஷ்டமும் நன்கு புரிகிறது நமக்கு….

பின் அனைவரும் குழு குழுவாகவும் தனியாகவும் நிழற் படங்கள் எடுத்து கொண்டிருக்க ….அடுத்து அனைவரும் சேர்ந்து நின்று group photo எடுக்க ஒரு மாமரத்தின் அருகே நிற்க , சிலர் மரக்கிளையில் ஏறி அமர்ந்து pose கொடுக்க…..அங்கிருக்கும் குரங்குகள் எல்லாம் ” யார்டா இவன் நமக்கு போட்டியா ? ” என்று வினோதமாக பார்க்கின்றன நம்மை…..

swimming1
அடுத்து resort இல் உள்ள swimming pool open செய்ய , சிலர் அதில் குதித்தும் குளித்தும் களிக்க, அருவியில் குளித்த நாம் சில நேரம் நீச்சல் குளத்திலும் குளித்து விட்டு வெளியே வந்து நுங்கு தின்று பதநீர் பருகுகிறோம்….

அடுத்து மதிய சாப்பாடு வாங்க சிலர் தென்காசிக்கு சென்றிருக்க மணி மதியம் 1 ஆகிறது….நாம் சில பழங்கள் மற்றும் தின் பண்டங்கள் வாங்க மீண்டும் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக Main falls செல்ல அப்போதும் மழை நம்மை நனைக்கிறது….

kadai veethi
ரம்முட்டான், மங்குஸ்தான், ஸ்டார் பழம், , மாம்பழம், டிராகன் ப்ரூட், பிளம்ஸ், பலா, நாவல் என்று பற்பல பழங்களும் chips வகைகளும் வாங்கி விட்டு , main falls எனப்படும் பேரருவியைக் நாம் காண…தன் பெயருக்கு ஏற்ப பெரும் அருவியாக கொட்டிக் கொண்டு இருக்கிறது அது, குளிக்கத் தடை நீடிக்கிறது….அருவியிடமும் அருகில் இருக்கும் குற்றால நாதரிடமும் தொலைவில் இருந்தே ” போய் வருகிறோம் ” என்று கூறி விடை பெற்று resort வந்தடைந்து வேக வேகமாக மதிய உணவு உண்கிறோம்…

சிலர் meals எனப்படும் சாப்பாடும் சிலர் பிரியாணி சிப்ஸ், தயிர் சாதமும் சாப்பிட்டு விட்டு , நம் luggage எல்லாம் pack செய்து 2.30 மணி அளவில் Room எல்லாம் காலி செய்து சாவியை resort manager இடம் ஒப்படைத்து விட்டு two wheeler இல் வந்தவர்கள் அவர்கள் வாகனத்திலும் சிலர் Eeco விலும் கிளம்ப…அங்குள்ள மரக்கிளைகள் எல்லாம் காற்றில் அசைந்து நம்மை நோக்கி” போய் வாருங்கள் ” என்று கையசைக்கின்றன….திருநெல்வேலியின் திசை நோக்கி திரும்புகிறது Eeco……!!

குற்றாலம் with Digital SEO Team

நிறைவுரை

நான்கு பதிவுகளாக குற்றால tripஐ 4 நாட்கள் படித்த நமக்கு இந்த நிறைவு பகுதி “நன்றி நவிலல் ” பாகமாக அமைகிறது…

மிகவும் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நிகழ்ந்த trip இது என நினைக்கிறேன்… இருநாள்தான் என்றாலும் 20 பேர் கொண்ட குழுவை இப்படி அழைத்து சென்றது சாதாரண செயல் அல்ல…

Trip இல் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் அந்த நாள் வேலையை வேறு வேறு யாரிடமோ ஒப்படைத்து, தங்கள் நேரத்தை ஒதுக்கி இங்கு வந்து , கலந்து கொண்டு உள்ளனர்..

நன்றி கூறும் பட்டியல் நமக்கு மிகவும் நீளம்……

குற்றாலத்திற்கு அழைத்து சென்ற குற்றாலம் ( SK Sir)

Trip ஐ மிக சிறந்த முறையில் plan & organize செய்து காலையிலே Train இல் சென்ற Priya Mam & Lakshmi Mam…

Trip ஐ கலகலப்பாக்க Fun games plan செய்த Jeyapriya மற்றும் “விழுந்து விழுந்து” வேலை செய்த Veni….

சில மணி நேரம் தான் வர முடியும் என்றாலும் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று பாதி நேரம் மட்டும் வந்த Rama priya & Saravanan….அவருடன் மழையில் நனைந்து கொண்டே வந்த Ramanathan….

Two wheeler இல் நெல்லையில் இருந்தே நனைந்து கொண்டே வந்த Gowtham & Raja….

Office ஐ போலவே அங்கு வந்தும் அமைதியாய் இருந்த Sankar …

Exam fever என்று சொல்வோமே.. அதில் Exam ஐ முடித்து விட்டு fever உடன் வந்த Prakash….

அண்ணன் தங்கையாக அடைமழையில் நனைந்து கொண்டே வந்த Chidambaram மற்றும் Dhanalakshmi …

மேலப்பாளையத்தில் இருந்து வந்திருந்த Usha மற்றும் Murugan Muthukumar….

பலமணி நேரம் பயணம் செய்து சேலத்தில் இருந்து வந்த Karthik Raja மற்றும் சென்னையில் இருந்து வந்த Gayathri P….

தாய் எனும் கடமையுடன் குழந்தைகளையும் அழைத்து வந்த Marieswari மற்றும் Shunmuga Jothi…

நிகழ்வுகளை எல்லாம் நினைவுகளாக்க நிழற்படங்கள் , Photography மற்றும் Videography எடுத்த Chithirai Paandi …

உணவு வாங்கவும் மற்றும் நம்மை அழைத்து செல்லவும் நேரம் காலம் பாராமல் கார் ஓட்டிய Driver தாத்தா மற்றும் Veyil muthu…

மிகவும் சீரான முறையில் Neat and Hygenic ஆக அமைந்து இருந்த Fun Land Resort….

Trip இல் கலந்து கொள்ள அனைவரையும் அனுமதித்த அவரவர் வீட்டில் உள்ளவர்…

Graphic design Team work முழுதையும் அன்று தனி ஆளாக பார்த்த Anandhi Mam…

மேலும் அந்த சனிக்கிழமை Tirunelveli Team இன் Work ஐ எல்லாம் தாங்கள் எடுத்துக் கொண்டு பார்த்த Chennai Team…

என அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி…….!!!

இந்த பட்டியலில் யாரேனும் விடுபட்டு இருக்கலாம் , அப்படி இருந்தால் அவர்களுக்கும் நன்றி….!!

இந்த பதிவுகளை எழுத சொல் அளித்த இன்தமிழுக்கும் , எழில் காட்சி அளித்த இயற்கைக்கும் , இறைக்கும் நன்றியை நீட்டிக்க வேண்டும்….

பதிவுகளை Translate செய்து ஆங்கிலத்தில் எழுதிய Revathi mamக்கும் பதிவுகளை வாசித்து , React செய்தும் Message பல அனுப்பியும் ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும்….மீண்டும் ஒரு முறை நன்றி கூற நிறைவடைகிறது பதிவு…

Eeco car இல் திருநெல்வேலியில் இறங்கிய நாம் வீட்டிற்கு நடந்து செல்ல அப்போது நம் மேல் விழும் சாரல் , குற்றால trip இன் நினைவு சாரலாக நனைக்கிறது மனதை….

சந்திப்போம் அனைவரும் அடுத்து ஒரு Trip இல் December மாதம்….

( நிறைவு )

The following two tabs change content below.
Our dynamic team blends creativity, strategy, and technology to craft impactful digital experiences. From web design to online marketing, our experts work in perfect sync to make your brand stand out. With Digital SEO, watch your business grow, bloom, and shine online.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *