குற்றாலம் with Digital SEO – 2
மாலை நேரம் 4.30 மணி இருக்கும்…அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை இருந்ததால், resort அருகே ஒரு சிறிய அருவி ஒன்றைக் கண்டுபிடித்து தெரிவித்து இருந்தனர்.

Walkable distance என்று சொல்வோமே, ஒரு 30 அடி எடுத்து வைத்தால் வந்து விடும் அந்த இடம். அந்த சிறிய அருவிக்கு பெயர் வைக்கப்படவில்லை. ஓடை போல் இருந்ததால் “ஓடை அருவி” என்றும் “குட்டி அருவி” என்றும் “பக்கத்து falls ” என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைத்தது, எல்லை இல்லா பரம்பொருளுக்கு பலரும் தங்களுக்குப் பிடித்த பெயர் சொல்லி அழைப்பது போல் இருந்தது….
முதலில் ஒரு சிலர் மட்டும் சென்று அந்த சிறிய அருவியில் குளித்துக்கொண்டு இருக்கிறோம் , மிக மிக சிறிய அருவி தான் கூட்டம் இல்லை, முதலில் குளிரில் நடுங்கிய நம் மேனி போக போக தன் தட்ப வெப்பத்தை மாற்றிக்கொண்டது, ஆனந்தமாய் நாம் நீராட, அடுத்து பலரும் வந்து பார்த்து அதில் இறங்கி குளிக்க ஆரம்பித்தனர்….சில நேரம் அப்படியே குளித்து விட்டு மீண்டும் resort க்கு நடந்து செல்லும் போதே நம் ஈர உடைகள் காற்றில் பாதி காய்ந்து விடுகின்றன….
குளித்து வந்த குளிர், சாரலின் ஈரம் , காற்றின் தண்மை ஆகியவை நம்மை சற்றே நடுங்க வைக்க சூடாய் இதமாய் தேநீர் அருந்துகிறோம் …சில தின்பண்டங்கள் நாவிற்கு சுவை சேர்க்கின்றன…
கடிகாரத்தின் முள் 6 மணியை நமக்கு காட்ட, சிலர் இரவு உணவு வாங்க தென்காசிக்கும் சிலர் செங்கோட்டை பார்டர் கடைக்கும் செல்ல நாம் Main falls எனப்படும் பேரருவிக்கு செல்கிறோம் Two wheeler இல்….
செல்லும் வழியெல்லாம் இயற்கை அன்னை உங்களை அருவியில் குளிக்க தடை விதித்தால் என்ன…? நான் நீராடுட்கிறேன் என்று சாரல் தூவியும் மழை பொழிந்தும் நம்மை நனைய வைத்து சிரிக்கிறாள் …Main falls முன் நிற்கிறோம் நாம் இப்போது….

பேரிரைச்சல் உடன் பெரும்வெள்ளமாய் கொட்டுகிறது குற்றால அருவி ..பால் போன்ற வெண்மை நிறத்தில் இருக்கும் அருவி Laser light மூலம் ஒளி பாயும் படி அமைக்கப்பட்டு சிவப்பு , ஆரஞ்சு , பச்சை, நீலம், மஞ்சள் என வித விதமான வண்ணங்களில் மாறி மாறி காட்சி தருகிறது நம் விழிகளுக்கு . அருவி என்பதே நீரின் நடனம் தான், அந்த நீரின் நடனத்தின் மேல் நடனமாடுகின்றன வண்ண மின்விளக்கின் ஒளிகள்…. இக்காட்சி DJ night party க்கு இயற்கை ஆடுவது போல் தோன்றுகிறது…
குளிக்க முடியாவிடினும் பேரருவியைக் கண்டு களித்து சற்றே கடைவீதி பக்கம் நம் கால்கள் நடக்க….நமக்கு இடது புறம் கோவில் சன்னதி தெரிய…வலது புறம் முன் இருக்கும் பல கடைகள் இப்போது இல்லை….அங்கிருக்கும் சுவரில் சில செய்யுள்கள் எழுதப்பட்டு உள்ளன…அதில் ஒன்றாக கீழுள்ள பட்டினத்தார் பாடல் இடம் பெற்றுள்ளது…

“காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு”
என்று பட்டினத்தார் நமக்கு கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசித்து விட்டு வா….என்று கட்டளை விதிக்கிறார் …
தெற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்து விநாயகரைத் தொழுது, குற்றால நாதர், குறும்பலா மரம், குழல்வாய் மொழி அம்மை, தரணி பீடம் ஆகிய சன்னதிகளை தரிசித்து விட்டு…கோவிலுக்குள் ஒரு இடத்தில் நின்று பார்த்தால் .. பேரருவியின் பொங்குமா கடல் தெரியும்…அதையும் பார்த்து ரசித்து விட்டு…
“குற்றாலத்து அமர்ந்து உறையும்கூத்தா, உன் குரை கழற்கே கற்று ஆவின் மனம்போலக்கசிந்து உருக வேண்டுவனே!”
என்ற மணிவாசக பெருமானின் திருவாசகம் பாடி மீண்டும் ஒரு முறை குற்றால ஈசனை வணங்கி வெளியே வருகிறோம்….
இப்போதும் சாரலும் மழையும் மாறி மாறி பொழிந்து கொண்டே இருக்க அப்படியே கடை வீதியில் நாம் நடக்க…சூடாக இலை அல்வா வாங்கி தின்று, பல கடைகளிலும் Taste க்காக sample கொடுக்கும் நேந்திரம் சிப்ஸ் சாப்பிட இனிப்பு மற்றும் காரம் சுவையை சமன் செய்கிறது நம் நா….

மேலும் கடை வீதிகளில் நம் விழிக்கு விருந்தாக வண்ண வண்ண தின்பண்டங்கள், சுவையான புது வித பழங்கள், விளையாட்டு பொருட்கள், ஆடைகள் என பற்பல கடைகள் அமைந்திருக்க..சாரலில் நனைந்து கொண்டே சூடாக பாதாம் பால் குடித்து விட்டு மீண்டும் அருவி அருகே வந்து புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டு…அருகே star fruits வாங்கி சுவைத்து விட்டு….நாம் கிளம்ப.. சுழலத் தொடங்குகிறது வாகனத்தின் சக்கரங்கள்….
சனிக்கிழமை இரவு என்பதால் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க…நாளை சாரல் திருவிழா தொடக்கம் என்று ஊர் முழுக்க மின் விளக்குகளால் ஜொலித்து கொண்டு இருக்கிறது குற்றாலம்…
Two wheeler இப்போது புலி அருவியை நோக்கி செல்ல…அங்கு தண்ணீர் நிலவரத்தையும் குளிக்க அனுமதிப்பதையும் அறிந்து கொண்டு மீண்டும் சாரல் மழையில் நனைந்து கொண்டே Fun land resort வாயிலை அடையும் போது நேரம் 8.45 இருக்கும்….
பசியோடு உள்ளே சென்ற நாம் ருசியான உணவு வகைகளை வயிறு நிறைய உண்டு விட்டு எழ முடியாமல் எழுகிறோம்…
தினம் தினம் Basecamp பழகிய நமக்கு… இன்று புதுமையாக காத்திருக்கிறது Fire camp ….
Latest posts by DS Team (see all)
- Navigating Online Credibility and How AI Can Detect and Remove Fake Reviews - May 25, 2026
- Understanding Google Search Console vs Google Analytics for Website Success - April 16, 2026
- How to Optimise Your Website for Answer Engines - March 16, 2026
