குற்றாலம் with Digital SEO – 3
இரவு நேர உணவு உண்டு நம் வயிற்று பசித்தீ அடங்கி இருக்க….வெளியே வளர்ந்து கொண்டு இருக்கிறது camp fire தீ…
கருமையான “வானம்” மேகங்கள் சூழ்ந்திருந்து சாரல் “நீர்” தெளிக்க , குளிர்ந்த “காற்று” நம் தேகத்தை வருட, “நிலத்தின்” மண் வாசனை நம் நாசிக்கு இனிதாக, நடுவில் இருக்கும் “நெருப்பின்” வெப்பம் நம்மை இதமாக்க, ஐம்பெரும்பூதங்களும் நமக்கு இன்பம் அளித்துக் கொண்டு இருந்தன….
Camp fire ஐ சுற்றி கூட்டமாக அனைவரும் வந்து சேர, என்ன என்ன பாடல் Play பண்ண வேண்டும், என்ன என்ன dance Steps போட வேண்டும், எப்படி ஆட வேண்டும் என்றெல்லாம் பெரிய discussion நடந்து கொண்டு இருந்தது….

வட்டமாக நின்று அனைவரும் ஆடத் தொடங்க , நடுவில் இருக்கும் நெருப்பும் பொன் நிறத்தில் பாடலுக்கு ஏற்ப அழகாய் ஆடிக் கொண்டு இருந்தது….
மிக நன்றாக ஆடினர் சிலர் , ஓரளவுக்கு ஆடினர் சிலர் , கொஞ்சம் ஆட முயற்சித்தனர் சிலர் , ஆடுவது போல நடந்தனர் சிலர், ஆடுவது போல நடித்தனர் சிலர், ஆடவே இல்லை சிலர் …
பாட்டுக்கு ஆடினர் சிலர், அவர்கள் பாட்டுக்கு ஆடினர் சிலர், பாடிக் கொண்டே ஆடினர் சிலர், ஓடிக் கொண்டே ஆடினர் சிலர், சிரித்துக் கொண்டே ஆடினர் சிலர், ஆசையாய் ஆடினர் சிலர், அமைதியாய். ஆடினர் சிலர், ஆனந்தக்கூத்தாடினர் சிலர்…
அனைவரையும் ஆட வைக்க அவர்களுக்கு steps சொல்லி கொடுத்து கஷ்டப்பட்டு , எப்படியோ அனைவரையும் ஒன்று போல தோளில் கை போட வைத்தும், கைகள் கோர்த்தும் simple steps சொல்லிக் கொடுத்து ஆட வைத்து விட்டனர்…
பற்பல துள்ளல் இசை பாடல்கள் வரிசையாக வர பலர் ஆடிக்கொண்டே இருக்க அதை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர் சிலர்…
அந்த பாடலில் ஒன்றாக ஒலித்த
“நெருப்பு கூத்தடிக்குது…காத்தும் கூத்தடிக்குது…ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…”
என்ற பா.விஜய் வரிகளும் யுவன் சங்கர் ராஜா இசையும்,வெங்கட் பிரபு & சித்ரா சிவராமனின் குரலும் camp fire சூழலை அப்படியே பிரதிபலிக்க…

” Dance is the hidden language of the soul ” என்ற ஆங்கில Quote நம் நினைவில் நடனமாடியது…
பலருக்கும் Trip இன் உச்சக்கட்ட enjoyment ஆக அமைந்தது இந்த camp fire…இரவு மணி 10.30 இருக்கும் அனைவரும் புலி அருவிக்கு குளிக்க செல்ல தயாராகி கொண்டு இருக்க…
மீண்டும்…. ஆடாமலே நின்ற ஆடவர் சிலர் தங்கள் ஆட்டத்தைத் தொடங்கி …ஆடிக் கொண்டே..ஆனந்தத்தின் உச்சத்தைத் தொட்டனர்…Camp fire ஐ சுற்றி…..
சிலருக்கு நன்றாக energetic ஆக ஆடுவது Enjoyment, சிலருக்கு அவர்கள் உடன் சேர்ந்து ஆடுவது enjoyment, சிலருக்கு அப்போது கைத்தட்டுதலும் விசில் அடித்தலும் enjoyment, சிலருக்கு அவர்கள் உடன் சென்று பாடுவது enjoyment, சிலருக்கு அந்த காட்சிகளை படம்பிடித்தல் enjoyment, சிலருக்கு அந்த சூழலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ரசிப்பதே enjoyment தான் ….
இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவரவர் நிலையில் இருந்து enjoy செய்து கொண்டிருக்க , நெருப்புடன் ஆடிய நாம் இப்போது நீருடன் விளையாட கிளம்புகிறோம் புலி அருவியை நோக்கி….
four wheeler இல் சிலர், two wheeler இல் சிலர் என்று நாம் செல்ல இரவு நேரத்தில் மரங்கள் சூழ் சாலையில் லேசான சாரல் விழ , குளிர்ந்த காற்று வேகமாக வீச , புலி அருவி அடைந்த நாம் குளிக்க ஆயத்தமாகிறோம்…
இங்கே மட்டும் தான் குளிக்க அனுமதி என்பதால் கூட்டம் கொஞ்சம் இருந்தாலும் , நன்றாக கொட்டியது அருவி…சிறிய சிறிய அருவியாக ஆங்காங்கே விழும் புலி அருவியின் குளிருக்கு முதலில் நாம் தயங்கி தயங்கி இறங்கினாலும்…அடுத்தடுத்து நம் உடல் நீரின் குளிருக்கு பழகிவிட….நன்றாக குளித்து மகிழ்ந்தோம்….
அப்படியே நனைந்து வந்த நாம் அருகில் இருக்கும் கடைக்கு வந்து உப்பு மிளகாய் சேர்த்த மாங்காய் வாங்கி கடிக்கத் தொடங்க……மாங்காயின் புளிப்பும் இனிப்பும், உப்பின் உவர்ப்பும், மிளகாய் தூளின் காரமும் …நம் நாவிற்கு பெருஞ்சுவையாக அமைகின்றன….
இரவின் இயற்கை அழகு காட்சி “விழி”க்கு இனிமையாக, புலி அருவியில் நீர் கொட்டும் ஓசை “செவி”க்கு விருந்தாக, கடையில் இருந்து வரும் காபியின் மணம் “நாசி”க்கு இதமாக, மாங்காயின் சுவை “நா”விற்கு விருப்பமாக, குற்றாலச் சாரல் காற்று “மேனி”க்கு சுகமாக…..என ஐம்புலன்களும் இன்பம் நுகர சில நேரம் புலி அருவி அருகே நின்ற நாம் அங்கிருந்து புறப்படும் போது சற்றே மேலே பார்க்க மரத்தில் அழகாகத் தூங்கி கொண்டு இருக்கிறது ஒரு குரங்கு….
மீண்டும் fun land resort ஐ அடைந்த போது இரவு மணி 12.00 இருக்கும்….அசதியின் காரணமாக கை கால் உடல் எல்லாம் வலிக்க …அப்படியே கட்டிலில் சாய்ந்த நம்மை ஆட்கொள்கிறாள் நித்ரா தேவி…..

அவளின் பிடியில் இருந்து விடுபட்டு சிலர் மீண்டும் வெளியே வந்து வட்டமாக அமர்ந்து இரவு , இயற்கை , இளைய ராஜா இசை என பாடல் பாடிக்கொண்டு இருக்கின்றனர்….
“ஊரு சனம் தூங்கிருச்சு…ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…பாவி மனம் தூங்கலையே…அதுவும் ஏனோ புரியலையே…”
என்று பாடி தாங்கள் தூங்காமல் …இரவைத் தூங்க வைக்க..அவர்கள் பாடலைக் கேட்டுக் கொண்டே..இமைகள் மூடி உறங்குகிறது இருள் சூழ்ந்த இரவு…..
Latest posts by DS Team (see all)
- Navigating Online Credibility and How AI Can Detect and Remove Fake Reviews - May 25, 2026
- Understanding Google Search Console vs Google Analytics for Website Success - April 16, 2026
- How to Optimise Your Website for Answer Engines - March 16, 2026
