digitalseo 1

குற்றாலம் with Digital SEO – 1

ஜூலை 19, காலை 9.45 மணி இருக்கும், வண்ணாரப்பேட்டைக்கு வந்தாகிவிட்டது. அன்று திருநெல்வேலியே குற்றாலம் போல தான் இருந்தது , சாரல் மழையும் மேக மூட்டமும் சூரியனை ஓய்வெடுக்க வைத்திருந்தன. காத்திருக்கும் போதே பற்பல எண்ணங்கள் அருவி போல் கொட்டிக் கொண்டு இருந்தன.

Eeco வில் 9 பேர், இருக்க 10.30 அளவில் தொடங்கியது பயணம், two wheeler இல் யார் யாரெல்லாம் வருகின்றனர் ? Train இல் சென்றது யார் ? இன்னொரு கார் எப்போது வருகிறது ? என்ற கேள்விகளுக்கு எல்லாம் Google map live location, GPS மூலம் பதில் சொல்லிக் கொண்டே இருந்தது.

kutralam
“குற்றாலத்தில் குளிக்கத் தடை” என்பதை திருநெல்வேலி climate வைத்தே மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்றாலும் எந்த எந்த அருவியில் தடை என்பதை social media channels, நமக்கு live update அளித்துக் கொண்டு இருக்க, தென்காசி மதுரம் Hotel அடையும் போது மணி 12.00 இருக்கும்.

அனைவருக்கும் meeting point ஆக அமைந்த அந்த உணவகத்தில் எல்லாரும் அமர்ந்து, அரட்டை அடிக்க, Menu card இல் உள்ள பாதி உணவுகள் ஒவ்வொன்றாக Dining table வந்து நிறைந்து நம் வாயுள் சென்று காணாமல் போய் கொண்டு இருந்தன. Soup, starters, Main dish, Gravy, Dessert என்று வகை வகையாய் உண்டு நிறைந்த வயிறுடன்,  நாம் செல்கிறோம் குற்றாலம் நோக்கி…

பழைய குற்றாலம் அருகே அமைந்துள்ள Fun land என்னும் resort நம்மை வரவேற்க, அங்கு சென்று allot செய்த ரூமில் luggage bags எல்லாம் வைத்து விட்டு, resort முழுக்க சென்று சற்றே சுற்றி பார்க்கிறோம்.

Western ghats எனப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பொதிகை திரிகூட மலை நமக்கு மிகவும் அருகே இருக்கிறது, மேக கூட்டங்கள் மலை மீது தவழ்ந்து செல்கின்றன, லேசாக சாரல் தூவ, தென்றல் நம்மைத் தீண்டுகிறது. குற்றாலத்தில் season உச்சத்தில் இருக்கும் நேரம் இது…

Resort முழுக்க ஆங்காங்கே கொய்யா மரங்கள், நாவல் மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள் , வண்ண வண்ண பூச்செடிகள் என்று பலவும் சூழ்ந்து இருக்க பசுமையாக அமைந்திருக்கிறது சூழல்.

“ஏன் மரத்தில் ஒரு பழம் கூட இல்லை?”என்ற நம் வினாவிற்கு பதிலாக”அதான் நாங்க இருக்கோம்ல”என்று சொல்லுவது போல் தாவி ஓடி வருகிறது குரங்கு கூட்டம்,

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

என்று பள்ளியில் படித்த குற்றால குறவஞ்சி பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது நமக்கு….

baba baby ball
Fun land இல் அடுத்து தொடங்குகின்றன Fun Games…கிட்டத்திட்ட 20 பேர் இருந்திருப்போம் …அனைவரும் அங்கு நிற்க, Baba Baby Ball என்ற game அனைவரையும் நன்றாக ஓட வைத்து சிரிக்க வைத்தது, இந்த விளையாட்டிற்கான விதிமுறைகளை எப்படியும் 10 முறையேனும் யாராவது ஒருவர் மாறி மாறி சொல்லி இருந்தாலும், புரியா புதிராக சிலர் விளையாடியும் ஓடியும் திரிந்து சிறப்பாக இது முடிய ….

hide seek
அடுத்து தொடர்ந்தது கண்ணாமூச்சி…சிறு வயதில் விளையாடிய கண்ணாமூச்சியை நாம் இன்று ஆட நமக்கு பால்ய கால நினைவுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்த, இருள் சூழ்ந்த உலகில் சிரிப்பு சத்தம் கேட்டன…

musical1
கண்ணாமூச்சியில் ஆங்காங்கே ஓடிய நாம் இப்போது வட்டமாக ஓட தயாராக… ஆரம்பிக்கிறது Musical chair, பாட்டு போடவும் நாம் ஓட , நடுவில் இருக்கும் No.of chairs மற்றும் Diameter of circle குறைந்து கொண்டே வர, out ஆனவர்கள் எண்ணிக்கையும் நமக்கு தலை சுற்றலும் அதிகமாக, Musical chair ஐ நிறைவு செய்த நாம் அடுத்து,

action
நேர்கோட்டில் வரிசை ஆக ஒருவர் பின் ஒருவர் நின்று , முதலில் இருக்கும் ஒருவர் பின்னால் திரும்பி ஒரு Action செய்ய அதை அப்படியே replicate செய்து நம் முன்னால் இருப்பர்களுக்கு செய்து காட்டுகிறோம்…”பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனது”என்பார்களே அப்படி தான் இருந்தது முதலில் செய்தவர் செய்ததும் அது திரிந்து திரித்து முற்றிலும் வேறாகி போனதும்…

இவ்வாறு பல fun games விளையாடியதில் மதியம் நாம் வயிறு முட்ட உண்ட உணவு நன்றாக செரித்து விட்டது, அப்படியே மாடி மேல் சென்று group photo ஒன்று அனைவரும் நின்று பொதிகை மலைக்கு முன் எடுத்துக் கொண்டோம் ..

இந்த ஒரு photo தான் நாம் அறிந்து எடுத்துக் கொண்டது, ஆனால் விளையாட்டின் போது பற்பல Candid photo எடுக்கப்பட்டன என்பது நமக்கு இரவு watsapp group பார்க்கும் போது தான் தெரிய வந்தது….

அடுத்து குற்றாலத்திற்கு வந்து குளிக்காமல் இருந்தால் எப்படி ?குதூகலமாக விளையாடிய நாம் அடுத்து செல்கிறோம் குளிக்க…..

[TO BE CONTINUED]….

The following two tabs change content below.
I’m Naurang Elango, a graphic designer who also loves writing aesthetic musings. Deeply inspired by Tamil literature, I believe words have the power to stir emotions and immerse people in a world of imagination, filling hearts with joy. Writing allows me to pen down my experiences, transforming journeys and moments into stories that live beyond time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *